TN Transport Department: நாளை பெளர்ணமி! பக்தர்கள் வசதிக்காக சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

Published : Nov 14, 2024, 07:13 PM ISTUpdated : Nov 14, 2024, 07:21 PM IST

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PREV
15
TN Transport Department: நாளை பெளர்ணமி! பக்தர்கள் வசதிக்காக சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பௌர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் பெளர்ணமி தினத்தையோட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

25

இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாளை திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட் விழுப்புரம் சார்பாக நாளை கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூர், சிதம்பரம், விருதாச்சலம், திட்டக்குடி, வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Annamalaiyar Temple: திருவண்ணாமலை கோவிலுக்கு போறீங்களா? இந்த தேதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

35

நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 335 மற்றும் சனிக்கிழமை 165, மொத்தம் 500 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

45

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், திருவண்ணாமலை (வழி ஆற்காடு, ஆரணி) மற்றும் திருவண்ணாமலை (வழி காஞ்சிபுரம், வந்தவாசி) ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 20, சனிக்கிழமை 20 மொத்தம் 40 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

55

எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும். பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

click me!

Recommended Stories