Published : May 13, 2025, 10:46 AM ISTUpdated : May 15, 2025, 09:24 PM IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019-ல் நடந்த பாலியல் சம்பவ வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். இளம் பெண் ஒருவர் தன்னை அடிக்காதீர்கள் அண்ணா என , பாலியல் துன்புறுதல் செய்த இளைஞர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி பெரும் அனைவரின் மனதையும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
26
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- 9 பேர் கைது
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் , பண வசதி படைத்த இளைஞர் கும்பல் பெண்களை காதல் வலை வீசி அழைத்து வந்து , அவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் பல கட்ட விசாரணைக்கு பிறகு முதலில் சபரி ராஜன்,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
36
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- சிக்கிய ஆவணங்கள்
அடுத்ததாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது கூட்டு சதி பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட 9 பேரும் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை ஆனது நடத்தப்பட்டு வந்தது. சாட்சிகளின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்க அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீதித்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
56
கோவை நீதிமன்றத்தில் குற்றவாளிகள்
மொத்தம் 1500 பக்க குற்ற பத்திரிகை சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்டது. 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கில் சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களாக இருந்தது.
66
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - தீர்ப்பு என்ன.?
பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 குற்றவாளிகள் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். இன்று மாலை 4.30 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
இதனிடையே அரசின் சார்பாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த குற்றச்சாட்டில் 20 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.