கரூர் வானில் மர்ம ஒளி தென்பட்டது. பொதுமக்கள் இதனை ஏலியன் பறக்கும் தட்டு என அச்சம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் பல இடங்களில் ஏலியன்சின் பறக்கும் தட்டு காணப்பட்டதாகவும் அவ்வப்போது வெற்றுகிரகவாசிகள் வந்து செல்வதாகவும் ஒரு வித கதைகளும் பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் காணப்படுகிறது. இந்த பரபரப்பான நிலையில், தமிழகத்தில் கரூரில் வானில் திடீரென மர்ம வெளிச்சம் வந்து வந்து சென்றது பொதுமக்கள் அச்சம் அடைய செய்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து பதிலடி கொடுத்து வருகிறது.
24
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
அப்போதும் கூட மர்ம வெளிச்சம் வானில் காணப்பட்டது. எனவே பாகிஸ்தான் ட்ரோன் தமிழகம் வரை வந்துவிட்டதோ என அச்சப்படும் அளவிற்கு அந்த வெளிச்சம் மக்களை பரபரப்பாக்கியுள்ளது.
தமிழகத்தில் கூட கடந்த ஆண்டு இசிஆர் சாலையில் மர்ம பறக்கும் தட்டு பறந்ததாக வீடியோவோடு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கரூரில் இரவு நேரத்தில் வானில் அங்கும், இங்குமாக வட்டமிட்ட மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
34
கரூருக்கு வேற்று கிரகவாசிகள் வருகையா.?
பூமிக்கு அருகில் ஏலியன்கள் வந்துவிட்டார்களோ என்று பொதுமக்கள் அச்சம் அடையும் நிலையும் உருவானது. கரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் வானில் இடி, மின்னல் அடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மேகக் கூட்டத்தில் இருந்து ஒரு மர்ம ஒளி ஒன்று அங்கும், இங்குமாக வட்டமடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக ஹாலிவுட் படங்களில் வரும் ஏலியன்கள் பயன்படுத்தும் வானூர்திகள் வடிவில், அந்த மர்ம ஒளி தென்பட்டதும் அந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரம் கோயில் திருவிழாக்கள் அல்லது ஏதேனும் கலை நிகழ்ச்சியின் போது அங்கு அதிக சக்தி கொண்ட டார்ச் லைட்டை வானில் யாரோ அடித்திருக்கலாம் இதன் காரணமாகவே வெளிச்சம் ஏற்பட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எனவே வானில் தென்பட்ட மர்ம வெளிச்சம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.