1.50 லட்சம் கார்கள்! இந்தியாவின் தலைநகரே தமிழகம் தான் - நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் ஸ்டாலின்

Published : Aug 04, 2025, 12:10 PM IST

மின்சார வாகன உற்பத்தில் இந்தியாவின் தலைநகராக தமிழகம் செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து்ார்.

PREV
13
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான VinFast நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இந்தியாவில் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் 2024 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.16,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலத்தில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது, முதல்கட்டமாக 114 ஏக்கரில் ரூ.1,119.67 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

23
17 மாதங்களில் ஆலை திறப்பு

உற்பத்தி திறன்: இந்த ஆலை ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. விஎப்6 மற்றும் விஎப்7 மாடல் பேட்டரி கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட வெறும் 17 மாதங்களில் ஆலை கட்டி முடிக்கப்பட்டு தற்போது அதன் முதல் கார் விற்பனையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஆலையில் தற்போது VF6, VF7 உள்ளிட்ட கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

33
இந்தியாவின் தலைநகரே தமிழகம் தான்

ஆலையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத உற்பத்தில் தமிழகத்தில் இருந்து தான் நடைபெறுகிறது. அந்த வகையில் மின்சார வாகன உற்பத்தில் இந்தியாவின் தலைநகராகவே தமிழகம் மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories