விஜய்யின் மதுரை மாநாட்டுக்கு சிக்கல்! கல்யாணம், பிறந்த நாள்னு கணக்கு சொல்லாதீங்க - போலீஸ் கெடுபிடி

Published : Aug 04, 2025, 11:04 AM IST

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டு தேதியை மாற்றி அமைக்குமாறு காவல் துறை தரப்பில் மீண்டும் கட்சியிடம் கோரப்பட்டுள்ளதால் மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

PREV
13
முக்கியத்துவம் பெறும் தமிழக வெற்றி கழகம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயல்திறன் தொடர்பான எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக ஆப் வெளியிடுவது, மாநாடு நடத்துவது என தனித்துவ அரசியலுடன் தமிழகத்தில் அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த மாநாட்டை மதுரையில் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். மேலும் மாநாட்டு தேதி வரலாற்றில் முக்கியமான நாளாக இருக்க வேண்டும் என அவர் போட்ட கண்டிஷனால் நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசித்து ஆகஸ்ட் 25ம் தேதியைத் தேர்வு செய்துள்ளனர்.

23
கேப்டன் பிறந்த நாள், விஜய் திருமண நாள்

ஏனெனில் ஆகஸ்ட் 25ம் தேதி தான் தேமுதிக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினமாகும். விஜயகாந்த் மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அவர் மீது தற்போதும் தென்மாவட்டங்களில் தனி ஆதரவு உள்ளது. அண்றைய தினம் மதுரையில் மாநாட்டை நடத்துவதன் மூலம் விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறலாம் என்ற திட்டத்தில் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று ஆகஸ்ட் 25ம் தேதி தான் கட்சியின் தலைவர் விஜய்யின் திருமண நாளும் கூட. இதனால் மாநாட்டை அதே தேதியில் நடத்தி விடலாம் என ஒப்புதல் அளித்த விஜய் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கட்டளை இட்டார். அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

33
மாநாட்டு தேதியை மாற்றுங்கள் - காவல்துறை

இந்நிலையில், வருகின்ற 27ம் தேதி அதாவது மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதற்கு இரண்டாவது நாளே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்து மதத்தினரின் பிற பண்டிகைகளைப் போல் அல்லாமல் அண்மை காலமாக விநாயகர் சதுர்த்தி பதற்றமான பண்டிகையாக மாறியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கட்டாயத்தில் காவல் துறை இருப்பதால் இதனைக் குறிப்பிட்டு தவெக.வுக்கு காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக, அதாவது ஆகஸ்ட் 21ம் தேதி மாநாட்டை நடத்துங்கள் அல்லது விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் நடத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டு தேதியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories