வடமாநிலத்தவர்களின் தமிழக வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதுட்டுமல்லாமல் விவசாய பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக குடும்பத்துடன் தமிழகம் வந்து விடுகின்றனர்.
24
Government schools
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகளை வேலை பார்க்கும் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அவர்கள் வீடுகளில் தாய் மொழியை பேசினாலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் போது, தமிழ் மொழியையும் படித்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலத்தவர் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்: வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைக்கின்றனர். மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும், வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.