இன்றும், நாளையும் தமிழ்நாடு மக்களுக்கு இலவசம்.! ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்

First Published | Oct 16, 2024, 10:39 AM IST

சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 70 நிவாரண முகாம்களில் 2789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வட கிழக்கு பருவமழை- ஆரம்பமே அமர்க்களம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னைக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று மாலை வரை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் நீர் முழுவதுமாக நிரம்பியதால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். .  

Heavy Rain

நிவாரண மையங்களில் மக்கள்

அந்த வகையில் மொத்தம் 70 நிவாரண முகாம்கள் உள்ளன,  அவற்றில் 2789 பேர் தங்கி உள்ளதாகவும்  அவர்களுக்காக மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் 174 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை  மழை முழுவதுமாக நின்றுள்ளது. இதனால் பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வருகிறது. இதனையடுத்து மீட்பு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் தேங்கிய நீரை அகற்றவும் மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. . 

Tap to resize

mk stalin

முழு வீச்சில் நிவாரண பணிகள்

இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

m k stalin Amma canteen

அம்மா உணவகத்தில் இலவச உணவு

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!