TVK Vs AIADMK: முதல்வரே உங்க கட்சியினரை கொஞ்சம் அடக்கி வையுங்கள்! விஜய்-க்கு அதிமுக அட்வைஸ்

Published : May 21, 2026, 10:21 AM IST

TVK Vijay: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்த அடிப்படையில் அவர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

PREV
16
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகம் தென்காசி மேற்கு மாவட்ட தவெக மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் மருத்துவ அணியில் பொறுப்பாளராக இருப்பவர்கள் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துகிறார்கள் என திமுக, அதிமுக காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

26
அதிமுக ஐடி விங் விமர்சனம்

இதுகுறித்து அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில்: தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் (PR Stunt) நடத்திக் கொண்டிருக்கிறது தவெக. மருத்துவ அணி என்ற பெயரில் தங்கள் கருப்பு Coat தலைவர் போலவே வெள்ளை Coat-ஐ மாட்டிக் கொண்டு ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு எல்லாம் சென்று அரசு மருத்துவர்களை, செவிலியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டி வருகிறது இந்த ரசிக வெறி கும்பல்.

36
துறை அமைச்சர் செய்யட்டும்

ஏற்கனவே முந்தைய திமுக அரசால் நிறைய மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், கடுமையாக Stress-க்கு ஆளாகியுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, உங்கள் ரீல்ஸ் Content-காக மேலும் Disturb செய்வது எப்படிப்பட்ட Sick Mindset? அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த வேண்டும் என்றால், அதை துறை அமைச்சர் செய்யட்டும்; துறை அதிகாரிகளோடு இணைந்து சட்டமன்ற உறுப்பினர் செய்யட்டும்.

46
சினிமா படம் போல டாக்டர் வேஷம்

அதை விடுத்து, சினிமா படம் போல டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு, மருத்துவ அணி எனக் கூறிக் கொண்டு, மருத்துவப் பணிக்கு இடையூறாக, நோயாளிகளை Endanger செய்யும் உங்கள் கட்சியினரை அடக்கி வையுங்கள் என்று தவெக தலைமை அலுவலகப் பக்கத்தைக் (@TVKVijayHQ) குறிப்பிட்டுப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. மருத்துவப் பணியாளர்களை அவர்களின் பணியை செய்ய விடுங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

56
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய்

அதேபோல் திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது? ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

66
கரூர் துயரம் சம்பவத்தில் ஜாமீன் பெற்றவர்

ஏற்கனவே கரூர் துயரம் தொடர்பான வழக்கில் 41 பேர் பலியானது தொடர்பாக அவதூறு பரப்பியதாக வாசுதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெற்று தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories