தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் டாப் 5 ரயில்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். சென்னை-மதுரை இடையேயான தூரத்தை இந்த ரயில்கள் விரைவாக கடந்து விடுகின்றன.
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண ரயில்களை விட அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு எப்போதும் மசுவு அதிகம். தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் ரயில்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
25
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
இந்த பட்டியலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் இடத்தில் உள்ளன. தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை-திருநெல்வேலி, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 120 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை மதுரை இடையேயான 462 கிமீ தூரத்தை 7 மணி முதல் 8 மணி வரை கடக்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 38 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இதுமட்டுமின்றி கோவை, பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தான் வேகத்தில் நம்பர் 1 ஆக இருக்கின்றன.
35
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்
தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் 2வது ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆகும். சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் இந்த ரயில் 6 மணி 15 நிமிடங்களில் 462 கிமீ தூரத்தை கடந்து விடுகிறது. வந்தே பாரத் போன்று முற்றிலும் ஏசி வசதி கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க ரயில்களில் ஒன்றான வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 1977ம் ஆண்டு முதல் சென்னை-மதுரை இடையே இயக்கப்பட்டுகின்றன. இப்போது மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635) 7 மணி நேரம் 15 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து விடுகிறது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் வெறும் 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்னையில் இருந்து மதுரை சென்று வேகத்தில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
55
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து மதுரை, தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16101) இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரைக்கு 7 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்து விடுகிறது. இத்தனைக்கும் இந்த ரயில் எக்ஸ்பிரஸ் தான். சூப்பர் பாஸ்ட் இல்லை. சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.
பாண்டியன் சூப்பர் பாஸ்ட்
சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்:16327) சென்னை-மதுரை இடையேயான தொலைவை 7 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து விடுகிறது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாள