பள்ளிக்கு விடுமுறை.! மீண்டும் வாயு கசிவு - சென்னை பள்ளியில் மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்

First Published | Nov 4, 2024, 11:39 AM IST

திருவொற்றியூரில் உள்ள விக்டரி பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முற்றுகையிட்டு வருகின்றனர். 

victory school

பள்ளியில் வாயு கசிவு

சென்னை திருவொற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி மதியம் வழக்கம் போல ஆசிரியர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தனர்.  

அப்போது பள்ளியில் வாய்வு கசிவு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட மாணவிகள்  கண் எரிச்சல் வந்தி மயக்கம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வாயு கசிவு காரணமாக பள்ளிக்கு கடந்த 26ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

victory school

மாணவிகள் மயக்கம்

இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், மாவட்ட  கல்வி துறை அதிகாரிகள்  காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு உறுதி செய்யாமல் எப்படி பள்ளி திறக்கப்பட்டது என மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 
 

Latest Videos


school student

பள்ளிக்கு விடுமறை

இதனிடையே மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதால் உடனடியாக மாணவிகளை பள்ளி வளாகத்திற்கு கீழே இறக்கி விட்டுள்ளனர். அப்போது 4 மாணவிகள் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், வாயு கசிவு தொடர்பாக மீண்டும் தகவல் பரவியதையடுத்து பள்ளியில் உள்ள மாணவிகளை பெற்றோர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வளாகத்தில் ஒரு பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!