இலவச தங்கும் விடுதி.! 3 வேளை உணவு.! சென்னைக்கு வரும் மாணவர்களுக்கு செம திட்டம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Nov 10, 2024, 12:16 PM IST

சென்னையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தங்க இடம் கிடைக்காமல் தவிப்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு புதிய விடுதி திட்டத்தை தொடங்கியுள்ளது. 

PREV
14
இலவச தங்கும் விடுதி.! 3 வேளை உணவு.! சென்னைக்கு வரும் மாணவர்களுக்கு செம திட்டம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
college student

மாணவர்களுக்கான கல்வி திட்டம்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில ஏழை எளிய மாணவர்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக இலவசமாக கல்வியானது வழங்கி வருகிறது. மேலும் காலை மற்றும் மதிய உணவு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் இலவச பேருந்து பயணம். இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.  அதே நேரத்தில் சென்னையில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு தங்க இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் அதிக கட்டணங்கள் கொடுத்து தனியாக ரூம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

24

இலவச தங்கும் விடுதி

மேலும் உணவுக்கென மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் உயர்கல்வி படிக்க மாணவர்கள் சென்னை வருவதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன் படி விடுதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

2024-2025 ஆம் ஆண்டிற்கான புதியதாக துவங்கப்படவுள்ள அரசு சிறுபான்மையினர் நலக்கல்லுாரி மாணவர் விடுதி சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவர் விடுதியுடன் கூடுதலாக இணைந்து செயல்பட உள்ளதால் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் மேற்படி கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

34

சலுகைகள்

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு ஜமக்காளம், போர்வை வழங்கப்படும்

விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கென மாதம் ரூ.150./ வீதம் 10 மாதங்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் ECS மூலம் வரவு வைக்கப்படும்..
 

44

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்

பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லுரரி விடுதியில் தங்கிப் பயில இடம் வழங்கப்படும்.

விடுதியில் சேர தகுதியுடைய மாணவர்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 6ம் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories