நடிகை கஸ்தூரி எங்கே.! தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

First Published | Nov 10, 2024, 10:43 AM IST

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது புகார்கள் குவிந்தன. தெலுங்கு மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தலைமறைவான கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர்.

அமைதிப்படை, சின்னவர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தர் நடிகை கஸ்தூரி, இதன் பின்னர் ஒரு சில படங்களில் கவர்ச்சிப்பட பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். சமீபகாலமாக சமூகப்பிரச்சனைகளில் அதிகரித்த ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். மேலும் தனது சமூகவலைதளத்தின் மூலம் கருத்துகளையும் பாஜக ஆதரவு நிலைப்பாடு தொடர்பான கருத்துகளை கூறினார். இந்த நிலையில் பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் போராட்டம் கடந்த வாரம்  நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி,  

actor kasthuri

சர்ச்சை கருத்தில் சிக்கிய கஸ்தூரி

அரசுத்துறைகளில் சில வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பணியாற்றி வருவதாகவும், அவர்கள் அளவுக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளதாகவும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.  மேலும் தெலுங்கு மக்கள் தொடர்பாகவும் தவறாக பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலில் தான் அப்படி எதுவும் பேசவில்லையென கூறியவர், அடுத்தாக தனது பேச்சை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனிடையே  அரசு அலுவலர்களின் பணியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதையடுத்து நடிகை கஸ்தூரி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

Tap to resize

தெலுங்கு சங்கம் புகார்

சில சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களை பற்றி பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும் அகில இந்தியத் தெலுங்கு சம்மேளன இயக்கத்தின் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கு தொடரப்பட்டது.  நடிகை கஸ்தூரி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்   அவர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

தலைமறைவான கஸ்தூரி

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அளிக்க திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகை கஸ்தூரி வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லையென தெரியவந்துள்ளது. மேலும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாகியுள்ள நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!