மழை ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகுது.! சென்னையை நெருங்கும் கருமேகங்கள்- தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்

First Published | Nov 10, 2024, 9:56 AM IST

தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழையானது வெளுத்து வாங்கும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

tamilnadu rain

வெளுத்து வாங்கும் மழை

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த புயல் சின்னம் தமிழக–இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும், மேலும் லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்கள்  மழையானது வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain

இடி மின்னலோடு மழை

குறிப்பாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியது. 
 

Tap to resize

Rain

12 மற்றும் 13 ஆம் தேதியில் மழை

இதனையடுத்து 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ராமநாதபுரம், மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்தது. இதனிடையே தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மழையானது கொட்டி வருகிறது. ஆரம்பமே அசத்தலாக சென்னையில் மழை விளாசியது. ஒரு கட்டத்தில் ரெட் அலர்ட் வெளியிடப்பட்டது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மக்கள் தயாரானார்கள். ஆனால் அந்த அளவிற்கு மழையானது பெய்யவில்லை.
 

rain kerala road

தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்

இதனையடுத்து சென்னை மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் மீண்டும் சென்னையில் கன மழை பெய்யப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில்,   தமிழகத்தில் மழையில் தற்போது  சரியான இடைவேளை நாள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும்  நவம்பர் 12 முதல் மழைக்காலத்தின் சுறுசுறுப்பான கட்டத்தை எட்டவுள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக சென்னையில் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கும் எனவும் இதனை தொடர்ந்து தமிழகத்தில் மற்ற பகுதிகளிலும் மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos

click me!