சேலத்தில் பேசிய தலைவர் விஜய், மற்ற கட்சிகளுக்கு சவால் விடுத்தார். தமக்கு அனுபவம் இல்லை என்பது ஊழல் செய்வதில் தான். வெறுப்பு அரசியலை விடுத்து மக்களுக்கு நல்லாட்சி தருவதே தனது நோக்கம்.
சேலம் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியல் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்: ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வான்னு சொல்றவங்களுக்கு என் வீடு எதுன்னு தெரியுமா? தமிழ்நாடு, தமிழ்நாடும்னு சொல்றாங்களே.. அது மற்றவங்களுக்கு வேண்டுமானால் Stateஆக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம் என் உறவு என் சொந்தம் என கூறினார்.
26
ஸ்டாலின் சார் ஆப்பரேட்டிங் புரொசிஜர்
இந்த விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை. நீதி கேட்டும் வந்துள்ளேன். நான் என்ன தப்பு செய்தேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்த இடம் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு தரமாட்டேன் என்கிறார்கள். தரவும் விடமாட்டார்கள். இது என்ன நியாயம். இது ஸ்டாலின் சார் ஆப்பரேட்டிங் புரொசிஜர்(SOP)
36
அரசியல் கட்சிக்கு விஜய் சவால்
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல்வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால். என்னை போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்த ஒரு சதவீதம் ஓட்டு உங்களால் வாங்க முடியுமா? சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க உங்களுக்கு தில் திராணி இருக்கிறதா? என தவெக தலைவர் விஜய் சவால் விடுத்துள்ளார் 75 வருடம் 50 வருடம் என அரசியல் கட்சி நடத்துபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறி உள்ளது. இரண்டு ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதம் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.
வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. தேர்தலில் வென்று மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன். அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடியும் என நம்மை பார்த்து கேட்கிறார்கள். எங்களுக்கு அனுபவம் இல்லைதான். கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை. அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா? அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்ததை தாண்டி என்ன செய்தார்கள் அதிகாரத்தை வைத்து. மக்களை நேசிக்கும் மனம் இருந்தால் போதும் அனுபவம் தேவையில்லை.
56
என்னால் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும்
என்னால் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் செய்து காட்டுகிறேன் என தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு கடந்துவிட்டது இப்போது நான் ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி கனவை கேட்கிறார்கள். மக்களின் கனவு உங்களுக்கு தெரியுமா ஸ்டாலின் சார்? ஏதாவது நல்லது செய்வீர்களா என நினைத்து தான் உங்களுக்கு வாக்களித்தனர்.
66
ஸ்டாலின் சார் என்னால் பதறுகிறார்
அனைவரும் தைரியமாக இருங்கள் வரப்போகுது நமது ஆட்சி சமூக நீதிக்கான ஆட்சியை அமைப்போம். நான் வீசிய குண்டு வெடித்துள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என நான் வீசிய குண்டு அனைத்து கட்சியிலும் தாறுமாறாக வெடித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சார் என்னால் பதறுகிறார். ஜெயிப்பதற்கு மட்டும் தான் கூட்டணி மற்றதற்கு அவர் தனி அணிதான். ஸ்டாலின் சார் உங்களின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் தவெக ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு என்று ஆவேசமாக பேசியுள்ளார்.