மானிய விலையில் உணவு பொருட்கள்
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அரசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானிய திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பெரிய அளவில் பயன் அடைந்து வருகின்றனர். விலையில்லா அரசி மூலம் நாள் தோறும் பல வீடுகளில் உணவுகள் சமைக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் வெளி சந்தையை விட குறைவான விலையில் சக்கரை, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைகள் உள்ளது. இதில் போலி அட்டைகளும் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. ஒருவருக்கே இரண்டு முதல் 3க்கும் மேற்பட்ட அட்டைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உணவுப்பொருட்களை பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
போலியான குடும்ப அட்டைகள்
இதனிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவு பொருட்களும் மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் சரியான முறையில் இதனை பயன்படுத்திக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக பொருட்கள் தேங்கி கிடக்கும் நிலை உள்ளது.
இதனால் தகுதியான குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பது தடைபட்டு விடுகிறது. இதன் காரணமாக ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் உணவு பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்களை நீக்க மத்திய அரசு திட்டமிட்டது. மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்க முடியும்.
தமிழகத்தில் குடும்ப அட்டைகள்
ஆனால் அரசு ஊழியர்கள் கூட இந்த கார்டை பயன்படுத்தி மானிய விலையில் உணவு பொருட்கள் வாங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது தகவல்களை(KYC) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது கூடுதலாக ஒரு லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மானிய விலையில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என ஒட்டு மொத்தமாக 36ஆயிரத்து 954 கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன் படி, செப்டம்பர் மாத இறுதிக்குள் அப்டேட் செய்ய அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நியாயவிலைக்கடைகளில் விரல் ரேகை மூலம் ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்து வருகின்றனர்.
ration shop
ரேஷன் கார்ட் அப்டேட்
தங்களது விவரங்களை சமர்பிக்காதவர்கள் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கவும், போலி பெயர்களை ஒழிக்கவும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 31க்குள் அப்டேட்டை முடிக்க அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தங்களது ரேஷன் கார்டு செயல்பாட்டில் உள்ளதா.? அல்லது நீக்கப்பட்டு விட்டதா.? என்பதை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஆதார் இணைப்பையும் மேற்கொள்ளலாம். அந்த வகையில் தமிழக அரசின் ரேஷன் கார்டு அப்பேட் செய்யப்படும் இணையதளமான TNPDS தளத்திற்கு சென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.
திருமணத்திற்கு ரூ.50ஆயிரம் வரை வழங்கும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி
ஆதார் எண் இணைப்பு- ஆன்லைன் அப்பேட் எப்படி.?
TNPDS பக்கத்திற்கு சென்று ரேஷன் கார்டு நிலை என்ற விருப்பத்தை ஒகே செய்தால். குடும்ப அட்டை செயல்பாட்டில் இருந்தால் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இல்லாமல் இணைப்பு ஆதார் செயலிழக்கப்பட்டது என ஸ்கிரீனில் காட்டினால். அதன் ஓகே செய்து ரேஷன் கார்டு எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிக்கு ஓடிபி வரும் இதனை பதிவு செய்தால் வெற்றிகரமாக அப்டேட் நிகழ்வு முடிந்துவிடும். அதே நேரத்தில் வீட்டின் அருகே உள்ள நியாயவிலைக்கடைக்கு சென்றால் கை விரல் ரேகை மூலம் அப்டேட் எளிதாக செய்யப்பட்டு விடும்..