tirupati laddu
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்துகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக எழுந்துள்ள சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது: ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார். திருமலை லட்டு தயாரிப்பில் இயற்கையாகவே சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முந்தைய அரசும், டிடிடியின் ஆட்சிக் குழுவும் லட்டுவின் தரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது தங்களின் சொந்தத் தொழில் என்பது போல் நடந்து கொண்டனர். புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என பரபரப்பை குற்றச்சாட்டை முன்வைத்தார். இது திருப்பதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
tirupati laddu
இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி சுப்பா ரெட்டி அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த அளவுக்கும் செல்வார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து சர்வ வல்லவரான அந்த ஏழுமலையான் முன் சத்தியம் செய்யத் தயாராக உள்ளோம். அதேபோல் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்: ஆய்வு அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி
tirupati laddu
இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட்டார். அதில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் மற்றும் மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் உறுதியானது. இந்நிலையில், திருப்பதி லட்டு எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க என ஆவேசமாக மோகன்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான சூப்பர் செய்தி! பள்ளிக்கல்வித் துறை!
இதுதொடர்பாக இயக்குநர் மோகன்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருப்பதி லட்டு எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.