கல்வி, மருத்துவம், சுய தொழில் உதவி திட்டங்கள்
இது மட்டுமில்லாமல் விடியல் திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரவேற்றுள்ள பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சேமிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்ததாக பெண்கள் கல்வியை தொடர வேண்டும் எனவும், இடை நிற்றலை குறைக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியில் இணையும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மாணவிகள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிவதாகவும் கூறப்படுகிறது. அடுத்தாக கர்ப்பினி பெண்களுக்கான டாக்டர் முத்து லட்சுமி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் எளிய பெண்கள் 18ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை பெற முடிகிறது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.