ONION : சர சரவென குறையப்போகுது வெங்காயம் விலை.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்- வெளியான குட் நியூஸ்

First Published | Sep 16, 2024, 10:05 AM IST

சமீபத்திய மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த நிலையில், மத்திய அரசு சில்லரை விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதனால் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் விலை சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்திலும் இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

Onion Price Today

வெங்காயத்தின் விலை உயர்வு

சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதில் வெங்காயம் மற்றும் தக்காளி தான் உணவுக்கு ருசியை கொடுக்கிறது. அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்தால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைவார்கள். மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை உருவாகும். இந்தநிலையில் தான் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பல முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பொறுத்தவரை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் பயிரடப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெங்காயமானது இந்தியாவிற்குள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

ஆனால் கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. பயிரிடப்பட்ட வெங்காயம் மழையின் பாதிப்பால் தண்ணீரில் மூழ்கியது. இதனால் வெங்காய விளைச்சல் முற்றிலும் அழிந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காய இறக்குமதி குறைந்தது. சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஒரு கிலோ வெங்காயம் தமிழகத்தில 60 முதல் 70 ரூபாய் விரை விற்பனை செய்யப்பட்டது.

இதனால் 5 கிலோ அளவிற்கு வாங்கி செல்லும் மக்கள் ஒரு கிலோ மட்டுமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வீட்டில் வெங்காயம் சார்ந்த உணவு பொருட்கள் சமைப்பது தவிர்க்கப்பட்டது. இந்தநிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெங்காயத்தை சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. 

Tap to resize

onion

சில்லரை விற்பனையை தொடங்கிய மத்திய அரசு

முதல் கட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் வெங்காயத்தை சில்லரை விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த திட்டம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் மத்திய அரசிடம் வெங்காய கையிருப்பானது, 4.7 லட்சம் டன்னாக உள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட இந்த திட்டத்தால் டெல்லியில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ. 60 ரூபாயில் இருந்து ரூ. 55 ஆகவும், மும்பையில் கிலோவுக்கு ரூ. 61 ரூபாயில் இருந்து ரூ. 56 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் வெங்காயத்தின் விலையை மேலும் குறைக்க சில்லரை விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

Onion Farmer

தமிழகத்திலும் விரைவில் வெங்காயம் சில்லரை வி்ற்பனை

இதே போல தமிழக அரசும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது.கூட்டறவு அங்காடிகள் மூலமாகவும், நியாயவிலைக்கடைகள் மூலமாகவும் விற்பனை செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்  தக்காளி ஒரு கிலோ 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லாரி, லாரியாக தமிழகத்திற்கு வரும் சிம்லா ஆப்பிள்.! கிடு,கிடுவென குறைந்த விலை- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

காய்கறிகளின் விலை என்ன.?

சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Latest Videos

click me!