பள்ளி மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு- என்ன தெரியுமா.?

First Published | Sep 16, 2024, 6:30 AM IST

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்களை தொடர்ந்து, தற்போது 'நல்விருந்து' திட்டத்தின் கீழ் வடை, பாயாசம், இனிப்பு வகைகள் உட்பட அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் 100 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் தமிழக அரசு

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. இது மட்டுமில்லாமல் மாணவர்ளின் இடை நிற்றலை குறைக்கவும் நடவடிக்கை எடுத்தது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுத்துள்ளது.

School Student

இடை நிற்றலை குறைக்க நடவடிக்கை

மேலும் ஏழை, எளிய மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் காலை உணவு திட்டம் தமிழக அரசு சார்பாக தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இந்த திட்டத்தால் பெரும் அளவில் மாணவர்கள் பயன் அடைந்த நிலையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் படி, ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

Latest Videos


வடை பாயாசத்தோடு நல் விருந்து

தமிழகம் முழுவதும் தற்போது 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு வடை, பாயாசத்துடன் வாழை இலையில் அறுசுவை உணவளிக்கும் வகையிலான மத்திய அரசின் 'நல்விருந்து' திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

லாரி, லாரியாக தமிழகத்திற்கு வரும் சிம்லா ஆப்பிள்.! கிடு,கிடுவென குறைந்த விலை- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
 

மாணவர்களுக்கான ஸ்பெஷலான உணவு

தமிழகத்தில் உள்ள 43,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 55 லட்சம் மாணவ, மாணவிகள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனா். இந்தநிலையில் மத்திய அரசின் திட்டமான  'நல்விருந்து நாள்' திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எப்போதும் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து ஸ்பெஷலான உணவுகள் வழங்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு உத்தரவின் பேரில், மாநில சமூக நலத்துறை 'நல்விருந்து' திட்டத்தைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு  உத்தரவிட்டுள்ளது.

school

100 நாட்களுக்குள் செயல்படுத்திடுக

மாணவா்களுக்கு வடை, பாயாசம், இனிப்பு வகைகள், தரமான அரிசி, காய்கறி. பருப்பு கொண்ட உணவு வகைகளை தயாா் செய்து வழங்க வேண்டும் எனவும் இந்த திட்டத்தை  நன்கொடையாளா்கள் மூலம் நிதியை பெற்று திதி போஜனம் எனப்படும் நல்விருந்து திட்டத்தைச் செயல்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் படி, ஒவ்வொரு பள்ளியிலும் 'நல்விருந்து நாள்' என்ற அடிப்படையில் 100 நாள்களுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு உணவுகள் வாலை இலையில் பரிமாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் சமூக நலத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களுக்கான சிறப்பு உணவு திட்டத்தில்  அரிசி, கோதுமை, பருப்பு, தினை வகைகள், காய்கறி, கீரைகள், சிறுதானியங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

school

நன்கொடையாளர்கள் உதவி மூலம் தொடங்கும் திட்டம்

இந்த திட்டத்தை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அப்பகுதியில் உள்ள நன்கொடையாளர்கள் மூலம் செயல்படுத்தலாம் எனவும்,  அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், முக்கிய விழாக்கள் போன்ற நாட்களில் மாணவர்களுக்கு உபயோகமாக இந்த நல் விருந்து திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி நல் விருந்து திட்டம் தொடர்பான புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

click me!