லாரி, லாரியாக தமிழகத்திற்கு வரும் சிம்லா ஆப்பிள்.! கிடு,கிடுவென குறைந்த விலை- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

First Published | Sep 16, 2024, 6:12 AM IST

சமீபத்திய மாதங்களில் உச்சத்தில் இருந்த ஆப்பிள் விலை, தற்போது சீசன் தொடக்கத்தால் குறைந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் தற்போது 90 முதல் 110 ரூபாய் வரை விற்பனையாகிறது, இது சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேபோல், ஓணம் பண்டிகைக்குப் பிறகு பூக்களின் விலையும் குறைந்துள்ளது.

சத்தான பழ வகைகளின் முதன்மையானது ஆப்பிள்

பழ வகைகளில் முக்கியமானது ஆப்பிள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக ஆப்பிள் உள்ளது.   பழங்களில் அதிக சத்து மிக்க பழமாக ஆப்பிள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தறினான  வைட்டமின் சி ஆப்பிளில் உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14 சதவகித அத்தியாவசிய வைட்டமின்களை இருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இது மட்டுமில்லாமல் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும் மற்றும் பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பெருமாள் கோயிலுக்கு இலவச ஆன்மிக பயணம்.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா.?

லாரி, லாரியாக வரும் ஆப்பிள்

இதயம் சார்ந்த நோய்களில் இருந்து உங்களை காக்க மிகவும் உதவுகிறது. இப்படி பல நன்மைகளை கொண்ட ஆப்பிள் பழம் விலைதான் உச்சத்தில் உள்ளது. ஆப்பிளின் தரத்தை பொறுத்து விற்பனை விலை மாறுபடுகிறது. அந்த வகையில் ஆப்பிள் விலை கடந்த 5 முதல் 5 மாதங்களாகவே உச்சத்தில் உள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் விலையானது 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் சாதாரணமக்களால் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிளின் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் வண்டி, வண்டியாக ஆப்பிள் வரத்து சந்தைக்கு அதிகரித்துள்ளது. சிம்லா ஆப்பிளானது  இந்தியாவில் இமாச்சல பிரதேசம்,  ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட்,  ஆகிய பகுதிகளில் அதிகளவில் விளைகின்றன.  தற்போது அங்கு சீசன் களை கட்டியுள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு வரத்து அதிகரித்துள்ளது. 

Tap to resize

ஒரு கிலோ ஆப்பிள் விலை என்ன.?

இதனால் ஒரு கிலோ ஆப்பிள் விலை தற்போது 90 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கோயம்பேடு, நெல்லை, மதுரை உள்ளிட்ட சந்தைகளில் ஆப்பிள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்கள் ஆர்வமுடன் ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களுக்கு ஆப்பிளின் விலை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் பூக்களின் விலையும் குறைந்துள்ளது. ஓணம் பண்டிக்கையொட்டி பூக்களின் விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ மல்லி 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1100 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 800 ரூபாய்க்கும், முல்லை 700 ரூபாய்க்கும், சம்பங்கி 250 ரூபாய்க்கும் விற்பனையானது. 

flower market

பூக்களின் விலை என்ன.?

மேலும் சாக்லேட் ரோஸ், பன்னீர் ரோஸ், வாடா மல்லி போன்ற பூக்கள் விலையானது உச்சத்தில் இருந்தது. தற்போது ஓணம். விநாயகர் சதூர்த்தி மற்றும் சுப முகூர்த்த தினம்  முடிவடைந்த நிலையில் பூக்களின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில் கனகாம்பரம் 800 ரூபாய்க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி 500 ரூபாய்க்கும், சாமந்தி 60 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 50 ரூயாக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Latest Videos

click me!