தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 12ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24
சிபிஐ விசாரணை
கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஜ விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் என பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து சிபிஐ விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
34
தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்
தவெக தலைவர் விஜய் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 12ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நேரில் ஆஜராக உள்ளார். இதனிடையே இன்று விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அதில் சிபிஐ மற்றும் தடவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பிரச்சார ஓட்டுநர் தற்பொழுது நேரில் ஆஜராகி உள்ளனர். சிபிஐ அதிகாரிகள் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் டிஜிட்டல் சர்வே அளவிடும் கருவியைக் கொண்டு சாலைகளின் இரு புறங்களிலும் இஞ்ச் இஞ்சாய் அளவிடும் பணியானது துவங்கி உள்ளது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் மற்றொரு புறம் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கும் பல்வேறு நெருக்கடிகளை மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.