Kolam Competition: இது நம்ம ஆட்டம் 2026' முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா ஜனவரி 22 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறுகிறது. ஊராட்சி, மாவட்ட, மற்றும் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகளுக்கு ரூ.20.48 கோடி பரிசுத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இது நம்ம ஆட்டம் 2026 என்ற பெயரில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்த விளையாட்டுத் திருவிழா ஜனவரி 22 முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள முன்பதிவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தமிழக அரசு மொத்தம் ரூ.20.48 கோடியை பரிசுத்தொகையாக ஒதுக்கியுள்ளது.
26
கோலப் போட்டிகள்
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் - 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவில் ஓவியம், கோலப் போட்டிகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
36
மாநில அளவிலான போட்டிகள்
மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா "இது நம்ம ஆட்டம் 2026" போட்டிகளில் ஒன்றிய அளவிலான போட்டிகள் அந்த அந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஜனவரி 22 முதல் 25 வரை நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜனவரி 30. முதல் பிப்ரவரி 01 வரை நடத்தப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி 06 முதல் 08 வரை நடைபெறவுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000 மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000 பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. அதேபோல் மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000 மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, மாநில அளவில் குழு போட்டியில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.75,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.50,000 மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
56
முன்பதிவு செய்திட கடைசி நாள்
இப்போட்டிகளில் பங்கேற்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட கடைசி நாள் ஜனவரி 21 மாலை 5.00 மணி வரை. போட்டிகள் நடைபெறும் நாள் அன்று நேரடியாகவும் பதிவு செய்து பங்கேற்கலாம். (ஒன்றிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் அந்த அந்த ஒன்றியத்தில் வசிப்பதற்கான ஆதார் கார்டு / ரேஷன் கார்டு நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்).
66
சரியான ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளி வீரர் / வீராங்கனைகள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in அல்லது https://cmyouthfestival.sdat.in இணையதளத்தில் உள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்தான முழு விவரங்கள் மற்றும் விதிமுறைகளை படித்து பிறகு சரியான பிரிவில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703461 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.