மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தினார்கள்.
10 மணி நேரம் அடுக்கடுக்கான கேள்விகள்
கரூர் சிபிஐ அலுவலகத்தில் சுமார் 10 மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. அப்போது இருவரிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதாவது கரூர் சம்பவம் நடந்த அன்று விஜய் முன்கூட்டியே பேசத் திட்டமிட்டுருந்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பேசுவார் என அறிவிக்கச் சொன்னது யார்?
அப்படியே நண்பகல் 12 மணிக்கு பேச வேண்டிய விஜய் பல மணி நேரம் தாமதமாக இரவு வர காரணம் என்ன? அதிக கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் தாமதமாக வந்தாரா?