Published : Apr 17, 2025, 07:50 AM ISTUpdated : Apr 17, 2025, 07:56 AM IST
Edappadi Palanisamy Withdraws Case Against TTV Dhinakaran: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மீதான வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுள்ளார். கூட்டணி அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா, துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோர் 2017ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அதிமுக கொடியை போன்று கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்தி இருந்தார்.
24
OPS Vs EPS
உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிிலையில் அதிமுக போன்ற ஒரு கொடியை பயன்படுத்தவும், ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2019ம் ஆண்டு அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்கு நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும் இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்தார். அதற்கு டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் சம்மதம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதி டிடிவி. தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் ஏற்கனவே அமமுக, ஓபிஎஸ் தரப்பு இருந்து வரும் நிலையில் டிடிவி.தினகரனுக்கு எதிராக வழக்கு வாபஸ் பெற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.