மக்களே உஷார்! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின் தடை அறிவிப்பு!

Published : Apr 16, 2025, 05:41 PM ISTUpdated : Apr 16, 2025, 05:52 PM IST

Tamil Nadu Power Shutdown: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததை அடுத்து, மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

PREV
15
மக்களே உஷார்! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின் தடை அறிவிப்பு!
tamilnadu electricity board

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். 

25
Monthly maintenance work

மாதாந்திர பராமரிப்பு பணி

அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

35
public exam

பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு

ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தமிழகத்தில் நடைபெற்று வந்த 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு காரணமாக மின்தடை செய்யப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு நிறைவு பெற்றதை அடுத்து நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

45
Tamilnadu power cut

மதுரை மாவட்டம்:

லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி சாலை, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆா் குடியிருப்பு, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணாநகா், சொக்கிகுளம், வல்லபபாய் சாலை, புல்லபாய் தேசாய் தெரு, பந்தயச் சாலை, கோகலே சாலை, ராமமூா்த்தி சாலை, புதிய டிஆா்ஓ குடியிருப்பு, சிவசக்திநகா், பாத்திமாநகா் ஆகிய இடங்கள்.

55
power shutdown

மின்தடை பகுதிகள்:

அதேபோல, புதூா் வண்டிப்பாதை முதன்மை சாலை, காமராஜா் நகா் 1,2,3,4 வீதிகள், எச்.ஏ. கான் சாலை, கமலா 1,2ஆவது தெருக்கள், சித்ரஞ்சன் வீதி, சரோஜினி தெரு, கஸ்டம்ஸ் குடியிருப்பு, புது நத்தம் சாலை, ரிசா்வ் லைன் குடியிருப்பு, ஆட்சியா் முகாம் அலுவலகம், திருவள்ளுவா் நகா், அழகா்கோவில் சாலை (ஐடிஐ முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை),, கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் கோகலே சாலை, மூக்கப்பிள்ளைத் தெரு, ஆத்திகுளம், குறிஞ்சிநகா், பாலமி, கனகவேல் நகா், பழனிச்சாமி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories