சித்திரை முழு நிலவு மாநாடு பந்த கால் நடும் விழா.! பாமக தலைவராக களத்தில் இறங்கிய அன்புமணி

Published : Apr 16, 2025, 01:53 PM IST

12 ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

PREV
14
சித்திரை முழு நிலவு மாநாடு பந்த கால் நடும் விழா.! பாமக தலைவராக களத்தில் இறங்கிய அன்புமணி

Chithirai Full Moon Vanniyya Youth Festival Conference : பாமகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டிற்கான முகூர்த்த பந்த கால் நடும் விழாவில் பாமக தலைவராக அன்புமணி கலந்துகொண்டார்.  

12 ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியா் சங்கம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது.
 

24

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

அதனை ஒட்டி இன்று முகூர்த்த பந்த கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, பாமக நிறுனவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது.

வன்னியர் சங்கம் நடத்தும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பின் தங்கிய மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். 

34
Anbumani Ramadoss

69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கனும்

இந்த மாநாட்டின் மூலம் சமூக நீதியை வென்றெடுக்க லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளனர். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும் வன்னியர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிற பின் தங்கிய சமுதாயங்கள் அனைவருக்கும் அவரவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடிப்படையில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.  

44
Chithirai Full Moon Vanniyya Youth Festival Conference

யாருக்கும் எதிரான மாநாடு இல்லை

அமைதியான முறையில் இந்த மாநாடு நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. தமிழ்நாட்டில் யார் யார் மிகவும் பின்தங்கி இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும் அதற்காகத்தான் இந்த மாநாடு என அன்புமணி தெரிவித்தார் 

Read more Photos on
click me!

Recommended Stories