#BREAKING இரண்டு நாள் கூட நிலைக்காத எடப்பாடி பழனிசாமியின் சந்தோஷம்! அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்!

Published : Aug 21, 2025, 12:15 PM IST

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கேவியட் மனுவை மறைத்து தடை உத்தரவு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு.

PREV
14

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

24

சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 4-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் கட்சி விதிப்படி, பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், விதிகளின்படி தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்பது குறித்து தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி கூறியதை அடுத்து கடந்த ஜூலை மாதம் இபிஎஸ் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

34

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தார். அதேபோல சூர்யமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் தான் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்ககூடாது என்று சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

44

இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி பாலாஜி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது கேவியட் மனு தாக்கல் செய்ததை மறைத்து தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து இபிஎஸ் எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், இடைக்கால தடை உத்தரவையும் நீதிபதி திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories