அட பாவிங்களா! காசுக்காக இப்படி கூடவா செய்வீங்க! டாக்டரை அலேக்கா தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

Published : Aug 21, 2025, 11:46 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய ஆட்டோவில் சென்றபோது நடுவழியில் விழித்தனர். போலீசார் விசாரணையில், புரோக்கர்கள் மூலம் ஆள் இல்லாத வீடுகளில் ஸ்கேன் சென்டர் நடத்துவது தெரியவந்தது. 

PREV
14
8 கர்ப்பிணி பெண்கள்

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் இடம் தெரியாமல் நடுவழியில் திருதிருவென விழித்து நின்று இருந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் ஆட்டோவை மடக்கி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள வந்ததாக கூறியுள்ளனர்.

24
ஆள்ளில்லாத வீடுகள் வாடகை

இதுகுறித்து கந்திலி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில் இறங்கியதில் புரோக்கர்கள் மூலம் ஆள்ளில்லாத வீடுகளை குறிவைத்து அதனை ஒருநாள் வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு நாள் ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதை வாடிக்கையாக வைத்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ இயக்குனர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தகவல் அளித்து மருத்துவ குழுவினரும் தீவிர விசாரணை நடத்தியதில் ஏற்கனவே இது போல ஒரு கும்பல் சுற்றி வருகிறது அவர்களாக தான் இருக்கும் என்று தொலைபேசி எண்களை வைத்து அடையாளம் கண்டு புரோக்கர்கள் வலைவீசி தேடி வந்தனர்.

34
பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் கைது

இந்நிலையில் மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவியான ஜோதி (37), சிவசக்தி (40), காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (47), சந்தூர் அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம் (39), திருப்பத்தூர் முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமலா (40) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் வேலை செய்தது உறுதி படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மூன்று பெண்களை வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும், இரண்டு ஆண்களை ஆண்கள் சிறையிலும் அடைத்தனர்.

44
சிறையில் அடைப்பு

மேலும் தலைமறைவாக இருந்த ஸ்கேன் செய்ய வந்த மருத்துவரான திருப்பத்தூர் சாமநகர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் சுகுமார்(60) என்பவரை கந்திலி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் சிசுக்கொலை கொலை செய்வதற்காகவே இந்த ஸ்கேன் நடப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories