மதுரையில் இன்று நடைபெறும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக மதுரையில் இன்று நடைபெறும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை உற்றுநோக்கி வருகின்றனர். இந்நிலையில் மாநாடு நடைபெறும் மதுரையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
26
மழை பெய்யவில்லை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. நேற்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தியது. பெரிதாக எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை. இந்நிலையில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
36
சென்னை வானிலை மையம்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்:- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
56
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்நிலையில் மதுரையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. வால்பாறை மற்றும் நீலகிரிகளில் மிதமான மழை பெய்யும். ஈரோடு, சேலம் மற்றும் வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை (KTCC) - 36°C வெப்பநிலையுடன் கூடிய வெப்பமான நாள். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
66
மதுரையில் வெப்பம் அதிகரிக்கும்
மேலும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் வெப்பம் மற்றும் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்த மண்டலம் இன்றும் நாட்டின் மிக வெப்பமான பகுதியாகத் தொடர்கிறது. வெப்பநிலை 38/39°C ஐத் தொடும். பாளையங்கோட்டை மண்டலம் இந்த வறுக்கப்படும் மண்டலத்தில் சேர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.