ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு.! டாஸ்மாக்கே மாறப்போகுது - குடிமகன்களுக்கு இனி கொண்டாட்டம் தான்

First Published | Nov 7, 2024, 1:55 PM IST

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் 100கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், குடிமகன்களுக்கு ஓரிரு வாரங்களில் சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகவுள்ளது. . 

தமிழகத்தில் மதுபானம் விற்பனை

மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.  நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 கோடி அளவிற்கு மதுபானம் விற்பனை நடபெறுகிறது. இதுவே மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. 2023- 2024ஆம் ஆண்டில் மட்டும்  45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டது. எனவே மதுபான விற்பனை தான் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது.
 

tasmac

மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூல்

இதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் ஒரே நாளில் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்ற கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தாலும் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டுகொள்ளாத நிலை தான் உள்ளது. கள்ளத்தனமாக 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் தொகை மட்டும் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

Tap to resize

டாஸ்மாக் கடைகளில் பில்

எனவே  இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்கப்பட உள்ளது.

இதற்காக பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு டிஜிட்டல்மயமாக்கம் தொடர்பாக 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் மதுபானத்திற்கு பில் வழங்கும் கருவி மூலம் முதற்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

tasmac

டிஜிட்டல்மயமாகும் டாஸ்மாக்

இந்த சோதனையின் போது ஏற்பட்ட குளறுபடிகள், குறைபாடுகளையும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளில் ஓரிரு வாரங்களில் முழுமையாக டிஜிட்டல் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கண்னிமயமாக்கல் மூலம் மதுபானம் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். இதன் மூலமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை என்பது தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Liquor bill

மதுபாட்டில் வாங்கினால் பில் கட்டாயம்

மேலும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டு வாரங்களில் மதுபானங்களுக்கு பில் வழங்கப்பட இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 4800 கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளதால்,

இனி மது வாங்கினால், பில் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே மதுபாட்டில்களுக்கு இனி கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் கம்பேக் கொடுத்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. 

Latest Videos

click me!