ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாயா.? அப்போ தக்காளி விலை என்ன தெரியுமா.?

First Published | Nov 7, 2024, 9:50 AM IST

மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் மற்றும் வட மாநிலங்களில் அறுவடை முடிவடைந்ததால், வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

சமையலும் காய்கறிகளும்

காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வது கடினமான காரியம். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி சந்தைக்கு குறைவான அளவே வரத்து வருவதால் விற்பனை விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி சமையலுக்கு மற்ற காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயம் தான் முக்கிய தேவையாக உள்ளது. அந்த அளவிற்கு சமையலோடு இணை பிரியாமல் உள்ளது தக்காளி மற்றும் வெங்காயம்,

ONION

உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை

இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிகப்பட்ட தடை நீக்கப்பட்டதால் உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் வெங்காய அறுவடை காலம் முடிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்  கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக வெங்காய வியாபாரி கூறுகையில், கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1300டன் வெங்காயம் வரத்து வரும். ஆனால் நாசிக்கில் இருந்து தற்போது 450 டன் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது.

Tap to resize

onion

வெங்காயத்தின் விலை இவ்வளவா.?

இதனால் மொத்த வர்த்தகத்தில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே வெளி சந்தையில் ஒரு கிலோ 120 முதல் 130  ரூபாயை எட்டியுள்ளது.  இந்த வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எனவே கிலோ கணக்கில் வாங்கி செல்லும் இல்லத்தரசிகள் தற்போது குறைந்த அளவிலையே வெங்காயத்தை வாங்கும் நிலை உள்ளது. 

தக்காளி விலை என்ன.?

அதே நேரத்தில் தக்காளி விலையானது கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெங்காயத்திற்கு போட்டியாக 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த ஒரு சில வாரங்களில் தக்காளி விலையானது வீழ்ச்சி அடைந்தது. அதன் படி 100 ரூபாய்க்கு 3 முதல் 4 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்தநிலையில் தக்காளி விலையானது சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 30  முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே உச்சத்தில் சென்றுள்ள வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

கடந்த முறை வெங்காயத்தை குறைந்த விலையில் மத்திய மாநில அரசுகள் வழங்கியது போல் இந்த முறையும் பண்ணை பசுமை மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

vegetables

பச்சை காய்கறிகள் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45க்கும்,  காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 

Latest Videos

click me!