சூப்பர் சான்ஸ்.! ஒரே மாதத்தில் லட்சத்தில் சம்பாதிக்க வாய்ப்பு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் பிளான்

First Published | Nov 7, 2024, 8:24 AM IST

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சுய தொழில் மூலம் ஒரே மாதத்தில் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 

job opportunities

தமிழக அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள்

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு பணியில் இணைய ஆர்வமாக உள்ளவர்களுக்கு தேர்வு வாரியம் மூலம் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது.

மேலும் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் போட்டு தமிழகத்தில் பல இடங்களில் தொழிற்சாலைகளையும் தொடங்கிவருகிறது. இதன் காரணமாக பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. இதே போல சொந்த தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு பயிற்சியும் வழங்கி கடனுதவியும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

job opportunities

சுய தொழில் தொடங்க பயிற்சி

அந்த வகையில் பேக்கரி தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், உணவு பொருட்கள் தயாரிப்பது. சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சி வழங்கி வருகிறது. மேலும் கடனுதவிக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக தொழில்முனைவோர் தொழிற்சாலை மற்றும் வீட்டு பராமரிப்புக்கு உதவும் இரசாயன பொருட்களை தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சிக்கான அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் பயிற்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

jobs

3 நாட்கள் பயிற்சி வகுப்புகள்

இந்த பயிற்சி வகுப்பானது வரும் 13.11.2024 முதல் 15.11.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கட்டிட வளாகம் சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பயிற்சி வகுப்புகள்

பித்தளை மற்றும் செம்பு க்ளீனர் திரவம், டாய்லெட் & டைல்ஸ் க்ளீனர், கார் வாஷ் ஷாம்பு.

மென்மையான சோப்பு, சானிடைசர், சோப்பு எண்ணெய், துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ்,

ஃபேப்ரிக் சாப்ட்னர். கிளாஸ் கிளீனர், ஹேண்ட் வாஷ், ஹெர்பல் ஃபீனைல், ஆயில் கிரீஸ் திரவம்

சோப்பு திரவம், டிஷ் வாஷ் திரவம், ஃபர்னிச்சர் மற்றும் மர பாலிஷ் திரவம், ஃப்ளோர் கிளீனர்.

 ரூம் ஃப்ரெஷ்னர் திரவம், துரு நீக்கி (அனைத்து உலோகங்கள்), வாஷிங் பவுடர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவத்தி மேலும் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள், தயாரிப்புகளை சோதனை செய்வது, அதனை எப்படி சந்தைப்படுத்துவது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

தகுதிகள்

 ஆண் / பெண்/ திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்

குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் 

மேலும் பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

பயிற்சி வகுப்புகள் தொடர்புக்கு

தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ

தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

8668100181/9841336033

முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!