இரண்டே நாட்கள் தான் உள்ளது.! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Nov 7, 2024, 6:49 AM IST

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. ரேஷன் கார்டில் மாற்றம் செய்வதற்காக தமிழக அரசு சிறப்பு முகாமை அறிவித்துள்ளது. சென்னையில் நவம்பர் 9ஆம் தேதி இந்த முகாம் நடைபெறும்.

ரேஷன் கார்டின் பயன்கள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டை தற்போது முக்கியமாக உள்ளது. மேலும் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் அட்டை தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை, பொங்கல் தொகுப்பு, வெள்ள நிவாரணம் போன்றவற்றிற்கும் முக்கிய தேவையான ரேஷன் கார்டு உள்ளது. எனவே ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டில் மாற்றம் செய்வதற்காக தமிழக அரசு சூப்பர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் வருகிற நவம்பர் 9ஆம் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த முகாமில் அனைத்து அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருப்பார்கள்.

அங்கு திருத்தங்கள் மேற்கொள்ள சென்றால் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் உடனடியாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Tap to resize

பெயர் சேர்க்க, நீக்க சூப்பர் வாய்ப்பு

அதன் படி நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகிற நவம்பர் 9ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செயதல்,  மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

புகாரும் அளிக்கலாம்

மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில்  மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல அந்த அந்த மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!