அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளராக இருந்தவர் சிவ பிரசாத். இவர் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். இந்நிலையில், அமமுக மாவட்ட செயலாளராக இருந்த சிவ பிரசாத், அக்கட்சியிலிருந்து விலகி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன், மாவட்ட துணைச்செயலாளர் சம்பத் குமார், ஒரு ஒன்றிய செயலாளர், இரண்டு பகுதி செயலாளர்கள், ஏழு வட்ட செயலாளர்கள், மற்றும் பல்வேறு அணி செயலாளர்களும் உடன் இணைந்தனர்.