மழை வெளுத்து வாங்க போகுது.! இந்த இடங்கள்தான் இன்றைய ஹாட் ஸ்பாட்- வெதர்மேன் அலர்ட்

First Published | Nov 7, 2024, 11:58 AM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீண்டும் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது மாலை நேரத்தில் பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மழையானது இன்று காலை சிறிது நேரம் இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் மழை கொட்டி வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

rain.j

சென்னை டூ ராமநாதபுரம் - மழை எச்சரிக்கை

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 

Latest Videos


15 மாவட்டங்களில் கன மழை

நாளைய தினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

heavy rains

இன்றைய ஹாட் ஸ்பாட் இது தான்

இதனிடையே தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் நல்ல மழை பதிவாகி உள்ளது. மழையானது  இன்றைய தினம் விட்டு விட்டு மழை தொடரும்.  காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதிகள் தான் இன்றைய ஹாட் ஸ்பாட்.  வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். 

click me!