பைக் டாக்ஸி தமிழ்நாட்டில் இயங்கலாம்! ஆனால்! ட்விஸ்ட் வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்!

First Published | Dec 11, 2024, 2:09 PM IST

Bike Taxi: பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு நகரங்களில் அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Car Auto Taxi

கார், ஆட்டோவை தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு நகரங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால் கார் மற்றும் ஆட்டோவில் குறிப்பிட்ட தூரத்திற்கு செல்ல அதிக ரூபாய் செலவாகிறது. ஆனால், பைக் டாக்ஸியில் எவ்வளவு தூரம் சென்றாலும்  100 ரூபாய்க்குள்ளாகவே முடிந்து விடுகிறது. இதனிடையே பைக் டாக்ஸிக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பைக் டாக்ஸியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புலம்பி வருகின்றனர். 

Bike Taxi

இந்நிலையில் பைக் டாக்ஸியை தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர். அதில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மனுவை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: Pongal Gift: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்!

Tap to resize

Rapido Bike

அதன் படி விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்பவும் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.  இதனால், பைக் டாக்ஸிகளுக்கு தடை என்ற விதிக்கப்படுமா  என கேள்வி எழுந்தது. 

Minister Sivasankar

இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. பைக் டாக்ஸிக்கு ஒரு புறம் வரவேற்பு மறுபுறம் எதிர்ப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பைக் டாக்ஸிக்கு எதிர்ப்பு உள்ளது. இவர்கள் அதை ஆபத்தாக உணர்கின்றனர். Yellow Board, White Board நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களுக்கு வித்தியாசம் உள்ளது. ஒரு வாகனம் டாக்ஸியாக பயன்படுத்தப்படும்போது அதில் பயணம் செய்பவர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்படும். ஆனால், பைக் டாக்ஸியில் அப்படி இல்லை.

இதையும் படிங்க:  School Holiday:டிசம்பர் 13ம் தேதி பள்ளி, கல்லூரி மட்டுமல்ல அரசு அலுவலத்திற்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

Bike Taxi News

வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது. இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது. ஏற்கனவே பைக்கில் பலரும் ஓட்டுநர் உரிமம் இன்சூரன்ஸ் இல்லாமல் பயணிக்கின்றனர். இதுகுறித்து தீவிர தணிக்கை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!