கடந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.