#BREAKING : இனி ஆம்புலன்ஸ் ஊழியர்களை தொட்டா அவ்வளவு தான்! 10 ஆண்டுகள் ஜெயில்! அதிமுகவினருக்கு எச்சரிக்கை

Published : Aug 25, 2025, 01:47 PM IST

எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்டது. கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததால் அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

PREV
14
எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

24
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இந்நிலையில் பொதுக்கூட்டங்களின் போது 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்தைக் கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக வேலூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக மீது குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விளக்கம் அளித்திருந்தார்.

34
108 ஆம்புலன்ஸ் வாகனம்

இந்நிலையில் நேற்று திருச்சி துறையூர் பகுதியில் ஆத்தூர் சாலையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்றது. இதையடுத்து அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்து ஆம்புலன்ஸையும், ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இதில்,காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அதிமுக கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

44
10 ஆண்டுகள் வரை சிறை

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால், மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜாமினில் வெளிவர இயலாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கூடிய அபராதம் விதிக்கப்படும். சொத்திற்கு ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையும் நீதிமன்றத்தின் மூலமாக அபராதத்துடன் செலுத்த நேரிடும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories