தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். விஜய்க்காக தனது ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அருண்ராஜ்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது வரை திமுக பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
இதனை எதிர்கொள்ள அதிமுக கூட்டணியை அமைத்து வருகிறது. முதல் கட்டமாக பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்ததாக பாமக, மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையவுள்ளது.
25
மக்களை சந்திக்கும் விஜய்
அதே நேரத்தில் திமுக- அதிமுகவிற்கு எதிராக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கி ஒரு வருட காலத்தை கடந்துள்ள நிலையில், இன்னும் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க செல்லாமல் உள்ளார். தற்போது வரை கோவை மற்றும் சென்னையில் மட்டுமே கூட்டங்களை நடத்தியுள்ளார். விரைவில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விஜய் செல்லவுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள்.
35
ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்தார் அருண்ராஜ்
இந்த நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் விஜய்க்கு பக்கபலமாக உள்ளனர். இந்த நிலையில் விஜய்க்காக தனது ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அருண்ராஜ், இவரது ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் விரைவில் தவெகவில் இணையவுள்ளார். அவருக்கு தவெகவில் இணை அல்லது துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் யார் இந்த அருண் ராஜ் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வந்தார். 2021ல் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து பல்வேறு பதவிகளை கவனித்து வந்த அவர்,
தற்போது பீகார் மாநிலம் பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்ததாக கூறப்படுக்கிறது. நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான நபராக பார்க்கப்படும் அருண் ராஜ், திரைமறைவில் பல்வேறு ஆலோசனைகளை விஜய்க்கு வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது
55
யார் இந்த அருண் ராஜ்.?
ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்த அருண் ராஜ் மூலமாகத்தான் விஜய்-க்கு அரசியல் உத்திகளை வகுத்து வரும் ஜான் ஆரோக்கியசாமி அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது நேரடி அரசியல் களத்தில் அருண்ராஜ் இறங்கவுள்ள நிலையில், தவெகவின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறுத.