ரெட் அலர்ட் : மிக கன மழை பெய்யப்போகுது.! அனைத்து துறைகளும் தயாரா இருங்க- தமிழக அரசு உத்தரவு

Published : May 23, 2025, 05:30 PM ISTUpdated : May 23, 2025, 05:31 PM IST

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது. கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

PREV
14
மிக கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்குள் முடிங்கி கிடக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது. இதனால் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

24
ரெட், ஆரஞ்ச் அலர்ட்

இந்த நிலையில் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 25 மற்றும் 26 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி இடங்களில் கன முதல் அதி கனமழையும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட ஆட்சியர்களோடு அவரச ஆலோசனை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

44
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை

மேலும் ஊட்டி மற்றும் வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும், கோவை மற்றும் நீலகிரி 3 மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories