தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2019-20 நிதி ஆண்டில் 1.47 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 3.23 லட்சம் ஏக்கர் அதிகரித்து, 2024-25-ம் ஆண்டில் 1.50 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதியில் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. எனவே விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவிக்கவுள்ளது.
24
மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்
இந்த நிலையில் விவசாயிகள் மின் மோட்டார் வாங்க 15ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியமாக 50% அல்லது அதிகபட்சமாக 15,000/- ரூபாய் வரை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
யாருக்கெல்லாம் 15ஆயிரம் மானியம்
நுண்ணீர்ப் பாசன அமைப்பு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே அமைத்தவர்கள் / அமைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்