Published : Apr 15, 2025, 12:07 PM ISTUpdated : Apr 15, 2025, 12:36 PM IST
Armstrong Wife Porkodi Removed: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் விசாரணையில் சினிமாவை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது.
24
Armstrong Murder Case
பிரபல ரவுடி தாதா நாகேந்திரன்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தன்னை பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என்று அவரது மனைவி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் மற்றும் பொற்கொடி இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் நிலவி வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
44
Armstrong wife Porkodi removed
பொற்கொடி கட்சியில் இருந்து நீக்கம்
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார். குடும்பம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டும் பொற்கொடி கவனம் செலுத்துவார். அதுமட்டுமல்ல, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே இனி கவனித்து கொள்வார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டுமேபொற்கொடி இனிமேல் கவனத்தை செலுத்துவார் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பொற்கொடி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது