கோயில்களில் 1000 இலவச திருமணங்கள்.! 70 ஆயிரத்திற்கு சீர் வரிசை- அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

Published : Jun 28, 2025, 01:15 PM IST

தமிழக அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு திருமண நிதியுதவி திட்டங்களை வழங்கி வருகிறது. விதவைகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

PREV
14
தமிழகத்தில் திருமண உதவித்திட்டம்

தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைவடிவமைக்கம்பெண்கள், கலப்புத் திருமணம் செய்பவர்கள் மற்றும் விதவைகளின் மகள்களுக்கு உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மறுமணம் செய்யும் விதவைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. பட்டதாரிகளுக்கு 50,000 ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரூ.25,000 + 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

24
திருமண திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவிகள்

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் விதவைகளின் மகள்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கமும், மற்றவர்களுக்கு ரூ.25,000 + 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி தொகை வழங்கப்படுகிறது. 

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சாதி மறுப்பு மற்றும் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதே போல தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படுகிறது. இந்தாண்டும் 1000 திருமணங்கள் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

34
அறிநிலையத்துறை திருமண திட்டங்கள்

இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 இணைகள் வீதம் 1000 இணைகளுக்கு திருக்கோயில்கள் மூலம் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025-2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். 

அதில், "திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டும் 1000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000/- மதிப்பீல் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

44
70 ஆயிரம் ரூபாய்க்கு சீர்வரிசையோடு திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவச திருமணத்திற்கான செலவின தொகை ரூ.60.000/- த்தினை (4 கிராம் தங்கத்தாலி உட்பட) ரூ.70,000/- ஆக உயர்த்தி. ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 1000 இணைகளுக்கு உபயதாரர் நிதி கிடைக்கப் பெறாத பட்சத்தில் திருக்கோயில் நிதி மூலம் திருமணங்களை நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories