முதலில் தெளிவாக பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்.. என்ன விஷயம்?

Published : Jan 14, 2026, 02:52 PM IST

சீமான் திராவிட கட்சிகளே வேண்டாம் என்ற பாதையில் செல்கிறார். அவர் எந்த கூட்டணிக்கும் வரப்போவதில்லை. விஜய்யை பொறுத்தவரை திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்க வேண்டும்.

PREV
14
அண்ணாமலை பேட்டி

திமுகவுக்கு எதிராக இருக்கும் விஜய் கூட்டணி குறித்து தெளிவாக பேச வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''தமிழகத்தில் 4 பிரதான கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக கட்சி மற்றும் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் உள்ளன.

24
விஜய், சீமான் உழைக்கிறார்கள்

ஆனால் தேர்தல் களம் நெருங்க நெருங்க மக்கள் எப்படி யோசிக்கிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவாக உள்ளது. தேர்தலில் திமுகவுக்கு எதிரான மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றோம். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் மற்ற கட்சிகளை சிறுமைப்படுத்தவில்லை. எல்லோரும் உழைக்கிறார்கள். சீமான் உழைக்கிறார். விஜய் எல்லா பக்கமும் செல்கிறார்.

34
விஜய் கூட்டணிக்கு வருவாரா? இல்லையா?

எங்கள் கூட்டணியில் அனுபவம் உள்ளது. பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் இருக்கிறது. வரும் 23ம் தேதி சென்னைக்கு பக்கத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்குகிறார். ஆகையால் திமுவுக்கு எதிரான வாக்குகள் எங்களுக்கு வரும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. விஜய் கூட்டணிக்கு வருவாரா? இல்லையா? என்பதை நான் முடிவு செய்ய முடியாது. தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

44
விஜய் தெளிவான முடிவெடுக்க வேண்டும்

சீமான் திராவிட கட்சிகளே வேண்டாம் என்ற பாதையில் செல்கிறார். அவர் எந்த கூட்டணிக்கும் வரப்போவதில்லை. விஜய்யை பொறுத்தவரை திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்க வேண்டும். எங்களுக்கும், அதிமுகவுக்கும் வேறு வேறு கொள்கைகள் இருந்தால் கூட திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒன்றாக இணைந்துள்ளோம். 

எங்களுக்கிடையே சித்தாந்தரீதியில் வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் திமுவை சாய்க்க ஓன்றிணைந்துள்ளோம். தேர்தலில் யார் வர வேண்டும்? யார் வரக்கூடாது என்பதில் விஜய் தெளிவான முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories