Annamalai | பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பண்ணையில் அமைந்துள்ள மாட்டு தொழுவத்தில் பரபரப்பாக பணியாற்றும் வீடியோ வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
தமிழகத்தின் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியை பேசுபொருளாக மாற்றியதில் அண்ணாமலையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த போது தான் பாரபட்சமின்றி திமுக, அதிமுக உட்பட அனைத்து தலைவர்களையும் விமர்சித்து தமிழக அரசியலை பரபரப்புடனேயே வைத்திருந்தார்.
24
பாஜக, அதிமுக கூட்டணி
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கு அண்ணாமலையின் விமர்சனமே முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக பெற்ற வாக்குகளை கூட்டணியாக பெற்றிருந்தால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 25 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
34
மாற்றப்பட்ட பாஜக தலைவர்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விருப்பப்பட்ட நிலையில், அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் மட்மே மீண்டும் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். அதன் பின்னர் அண்ணாமலை மாற்றப்பட்டு மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.
இதன் பின்னரே அதிமுக, பாஜக கூட்டணி உருவானது. இந்நிலையில், அண்ணாமலை தனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் பணிகள் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மாட்டு சாணம் அள்ளுவது, மாடுகளுக்கு உணவளிப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.