2025-26 கல்வியாண்டிற்காக, மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகள் RTE அடிப்படையில் விண்ணப்பித்துள்ளன. மொத்தம் LKG வகுப்பில் 81,927 மாணவர்களும், முதல் வகுப்பில் 89 மாணவர்களும் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இறுதி கட்டச் சேர்க்கை அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:
அக்டோபர் 30, 2025 : ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை நடைபெறும்.
அக்டோபர் 31, 2025: ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையின் (Random Selection) மூலம் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படும்.