விஜய் கிட்ட போய் கேளுங்க.. நாங்க என்ன மார்க்கெட்டிங் ஆபீசரா? சீறிய அண்ணாமலை!

Published : Oct 03, 2025, 09:02 PM IST

கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பதிலளித்தார். இதுகுறித்து விஜய்யிடம் கேளுங்கள், நாங்கள் அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபீசர்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.

PREV
14
நாங்க என்ன மார்க்கெட்டிங் ஆபீசரா?

கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்த கேள்விகளை தவெக விஜயிடமும் அக்கட்சி நிர்வாகிகளிடமும் கேளுங்கள் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாங்கள் என்ன அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபீசர்களா? எனவும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

24
விமான நிலையத்தில் அண்ணாமலை

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து தி.மு.க. அரசு மீதும், தவெக மீதும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மதுரை விமான நிலையத்தில் ஆவேசம் இந்தச் சூழலில், கரூர் மற்றும் ஒட்டன்சத்திரம் செல்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்தடைந்தார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கரூர் சம்பவம் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்துக் கேள்வி எழுப்பினர்.

34
ஆவேசமான அண்ணாமலை

செய்தியாளர்களின் கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:

“எந்தக் கேள்வியாக இருந்தாலும் விஜய் இடம் கேளுங்கள். அவரைத் தவிர மற்ற எல்லோருமே கரூர் சம்பவத்தை பற்றிப் பேசுகிறார்கள். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் போய் கேளுங்கள். நாங்கள் என்ன அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபீசர்களா? எங்களிடம் ஏன் மதுரை, சென்னை என எல்லா இடங்களிலும் நொச்சி நொச்சினு இதே கேள்விகளைக் கேட்கிறீர்கள்?

44
சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டோம்

"தொடர்ந்து எங்களையே விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்? சொல்ல வேண்டிய கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் சொல்லி விட்டோம். பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடமும், கட்சியினரிடமும் இது குறித்துக் கேள்வி எழுப்புங்கள்.”

இவ்வாறு கூறிவிட்டு, கரூருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு வந்தது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, “முதல்வர் கூறியது குறித்து நாளை பேசுகிறேன்” என்று கூறிவிட்டு வேகமாகத் தனது காரில் ஏறிச் சென்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories