ஷாக்கிங் நியூஸ்! கர்னூல் ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Published : Oct 25, 2025, 01:54 PM IST

ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து, கர்னூல் அருகே இருசக்கர வாகனம் மீது மோதி தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், தீபாவளிக்கு பின் பெற்றோரை காண வந்த திருப்பூர் இளைஞர் பலியானார்.

PREV
14
காவேரி டிராவல்ஸ் ஆம்னி பேருந்து

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு படுக்கை வசதி கொண்ட காவேரி டிராவல்ஸ் ஆம்னி பேருந்து 43 பயணிகள் என மொத்தம் 46 பேருடன் சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்துக்கொண்டிருந்தது.

24
தீ விபத்து

அப்போது சாலையின் முன்னாள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.

34
20 பேர் தீயில் கருகி பலி

அதிகாலை என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தனர். அதில் 27 பேர் படுகாயங்களுடன் தப்பினர். இந்த கோர தீ விபத்தில் சிக்கி 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆந்திராவில் 6 பேர், தெலங்கானாவில் 6 பேர் என தெரியவந்தது. மேலும் சிலர் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

44
திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு

இந்நிலையில் கர்னூல் ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூர் அருகே பூலுவப்பட்டி தோட்டத்து பாளையம் ஊரைச் சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகன் யுவன் சங்கர் ராஜ்(22) உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றும் இவர் தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காததால் பண்டிகைக்கு பிறகு பெற்றோரை பார்க்க பேருந்தில் வரும் போது விபத்து நடந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories