அப்பா எப்படி இருக்கீங்க.. மருத்துவமனையில் ராமதாஸ்.! அலறி அடித்து ஓடிய அன்புமணி

Published : Oct 06, 2025, 09:14 AM IST

உடல்நலப் பரிசோதனைக்காக ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் பகையை மறந்து, அன்புமணி தனது தந்தையை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

PREV
14
பாமகவில் உட்கட்சி மோதல்

உட்கட்சி மோதலால் தந்தை- மகன் என இரண்டு பிளவாக பாமக பிளவுப்பட்டுள்ளது. நான் தான் பாமக தலைவர் என ராமதாஸ் ஒரு பக்கமும், தான் தான் தலைவர் என அன்புமணி ஒரு பக்கமும் தனி தனி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக நிர்வாகிகள் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் திகைத்து நிற்கிறார்கள். 

ஒரு பக்கத்தில் அன்புமணியை கட்சியை வீட்டு நீக்கி ராமதாஸ் அதிரடி அரசியல் செய்து வரும் நிலையில், ராமதாசுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கி வருகிறார் அன்புமணி, இதனால் இரு தரப்பிற்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

24
மருத்துமனையில் ராமதாஸ்

எனவே சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் யார் எந்த பக்கம் கூட்டணி அமைக்கப்போகீறார்கள். எந்த அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் (வயது 86) உடல்நிலை பரிசோதனைக்காக நேற்று ( அக்டோபர் 5, 2025) இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இருதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனைக்காகவும், வழக்கமான உடல் பரிசோதனைக்காக என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே ராமதாஸ் உடல்நிலை சீராகவும், நிலையானதாகவும் உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

34
ராமதாஸ் உடல்நிலையை விசாரித்த அன்புமணி

தந்தை - மகனாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டி வரும் நிலையில், அன்புமணி தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கேள்விப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆயிரம் விளக்கு அப்பலோவிற்கு சென்ற அன்புமணி அங்கு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை ராமதாஸை சந்தித்து உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்துள்ளார். 

மேலும் மருத்துவர்களிடம் தனது தந்தையின் உடல் நிலை எப்படி உள்ளது எனவும் விசாரித்துள்ளார். இந்த சம்பவம் பாமக உட்கட்சி அரசியல் மோதல்களுக்கு மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

44
ராமதாஸ் உடல் நிலை எப்படி இருக்கு.?

இதனிடையே ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2024 ஜூலை மாதத்தில்யும் இதே அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், 

அப்போதும் உடல்நிலை சீராக இருந்தது. எனவே தற்போது உடல் நிலை பரிசோதனை முடிவடைந்து மீண்டும் அரசியல் களத்தில் ராமதாஸ் இறங்குவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories