October 2025 long weekend : செப்டம்பர் மாத தொடர் விடுமுறைகள் முடிவடைந்த நிலையில், அக்டோபர் மாதம் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அக்டோபர் 18 முதல் 21 வரை அரசு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
விடுமுறை கிடைத்தால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை கொண்டாட்டம் தான், அதிலும் தொடர் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். உடனே வெளியூர்களுக்கு சுற்றுலா, சொந்த ஊருக்கு பயணம் என புறப்பட தயாராகுவார்கள். அந்த வகையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் கொண்டாட்டமான மாதமாகவே அமைந்துள்ளது.
செப்டம்பர் மாதம் இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கொத்தாக 5 முதல் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
24
பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்
சனி, ஞாயிறு வார விடுமுறையோடு சேர்ந்து ஆயுத பூஜை விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை கிடைத்தது. இதனால் தங்களது குழந்தைகளோடு வெளியூர் சுற்றுலா செல்லவும், உறவினர்கள் வீட்டிற்கு பயணிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து காலாண்டு விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இன்று முதல் திறக்கப்படவுள்ளது.
இதனால் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்பி வருகிறார்கள். பள்ளி மாணவர்களும், அரசு ஊழியர்களும் நீண்ட நாட்கள் விடுமுறைக்கு பிறகு தங்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.
34
மீண்டும் தொடர் விடுமுறை.?
இந்த நிலையில் மீண்டும் எப்போது விடுமுறை வரவுள்ளது. அதிலும் தொடர் விடுமுறை எப்போது என காலண்டரை பார்த்து கணக்கிட்டு வருகிறார்கள் மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள். அந்த வகையில் வருகிற 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையானது கிடைக்கவுள்ளது.
அக்டோபர் 18 சனிக்கிழமை , அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக வரவுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விடுமுறை உள்ளது. அடுத்ததாக அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை தமிழக அரசு சார்பாக பொதுமக்கள் வசதிக்காக ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கவுள்ளது.
இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. எனவே நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும்மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வர இருப்பது கொண்டாட வைத்துள்ளது.
எனவே இந்த விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஏற்கனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.